தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூரில் இருந்து ரேணிகுண்டாவை நோக்கி காலிப்பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகில் சென்ற போது ரயிலின் 22-வது பெட்டியில் சக்கரங்கள் திடீரென தடம்புரண்டுள்ளது. இதனை அறிந்த ரயில் இன்ஜின் ஓட்டுனர் உடனே ரயிலை நிறுத்தி உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம்புரண்ட ரயில் பெட்டியை சரி செய்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரயில் தடம்புரண்டதால் சென்னைக்கு செல்லும் ரயில்கள் விரைவு ரயில் பாதையில் சென்றுள்ளது. மேலும் ரயில் தடம்புரண்ட காரணம் பற்றி ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.