தட்டிக் கேட்ட 2 மீனவர்களை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சமர் வியாஸ் பகுதியில் மீனவரான தங்கராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் தங்கராஜ் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரின் சொந்தக்காரரான பழனிவேல் ராஜ் என்பவரின் மோட்டார்சைக்கிளிலும், மற்றொருவர் வண்டியில் அவரின் மனைவியும் அமர்ந்துகொண்டு ராஜபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் மேல அலங்கார தட்டை பகுதியில் வசிக்கும் ஹரி பிரசாத், செல்வ பூபதி மற்றும் அவரின் நண்பர்கள் சிலருடன் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து அவ்வழியில் சென்ற தங்கராசின் மனைவியை அங்கு நின்று கொண்டிருந்த 6 பேரும் இணைந்து தகாத வார்த்தைகளால் கிண்டல் பேசியுள்ளனர் . இதனை தங்கராஜ் மற்றும் பழனிவேல்ராஸும் தட்டி கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அவர்கள் 6 பேரும் இணைந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்கராஜ் மற்றும் பழனிவேல்ராஜை பலமுறை குத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதில் தங்கராஜ் மற்றும் பழனிவேல்ராஜ் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனை பார்த்து தங்கராஜன் மனைவி அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து படுகாயமடைந்த 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தங்கராஜின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்கராஜ் மற்றும் பழனிவேல் ராஜை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற 6 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.