Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுமா….? எதிர்பார்ப்பில் விவசாயிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் சின்னாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் மூலமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வசதியும் இந்த ஆற்றின் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதனை அடுத்து இந்த ஆறு பஞ்சப்பள்ளி, அத்தி முட்லு, அமானி மல்லாபுரம், கோடுபட்டி, வழியாக சென்று ஓகேனக்கலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. பஞ்சப்பள்ளி முதல் ஒகேனக்கல் வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு எந்தவித தடுப்பணைகளும் இதுவரை கட்டப்படவில்லை.

இதனால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது எல்லாம் சுமார் இரண்டு டிஎம்சி தண்ணீர் பயன்படுத்தப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம் சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் இந்த தண்ணீர் எதற்கும் பயன்படாமல் இறுதியாக கடலில் சென்று கலக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தொல்லகாது பகுதியில் தடுப்பணை கட்டினால் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும் என்ற கோரிக்கையை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலக்கோடு பகுதியில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்களும் விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

Categories

Tech |