கொரோனா வைரஸ் தொற்றை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழியென பிரதமர் அப்போது தெரிவித்தார். கொரோனாவை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.