பிரிட்டனின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள தடுப்பூசி குறித்து பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பல விமர்சனங்களை கூறியுள்ளார்.
பிரிட்டனின் ஸ்வீடிஸ் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கியது. ஆனால் இந்த தடுப்பு மருந்து குறித்து மிகக்குறைந்த தகவல்கள் மட்டுமே உள்ளது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். “இந்த தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரை பயனற்றது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இந்நிலையில் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை போடலாமா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பு மருந்தை பரிசோதிக்க எங்களுக்கு என்று சொந்தமாக ஒரு அறிவியல் குழு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல் பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான இடைவெளியை 12 வாரங்களாக அதிகரித்தது ஏன்? என்ற கேள்வியையும் அவர் கேட்டுள்ளார்.