Categories
உலக செய்திகள்

கோவிஷில்டு தடுப்பூசிக்கு…. கிடைத்தது அங்கீகாரம்…. பிரபல நாட்டு அரசின் அறிவிப்பு….!!

கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமை படுத்தபடமாட்டார்கள் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அரசு சமீபத்தில் அங்கீகரித்தது. எனினும் தடுப்பூசி போட்ட இந்தியர்கள் இங்கிலாந்திற்கு செல்லும் பட்சத்தில் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்த படுவார்கள் என அறிவித்திருந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தி தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்துவந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைவரும் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அரசு வரும் அக்டோபர் 11-ம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட்ட இந்தியர்கள் இங்கிலாந்தில் தனிமைப் படுத்தப்பட வேண்டியது இல்லை என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அலெக்ஸ் எல்லிஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில்,” இங்கிலாந்திற்கு வரும் இந்தியர்கள் கோவிஷீல்டு இரண்டு டோஸ்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி 2 டேஸ் செலுத்தியிருந்தால் அவர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப் படமாட்டார்கள். மேலும் இந்த நடைமுறை வரும் 11ஆம் தேதி முதல் பின்பற்றப்படும் எனவும், சில முக்கியமான தருணங்களில் இந்திய அரசு இங்கிலாந்திற்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி” எனவும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

Categories

Tech |