Categories
தேசிய செய்திகள்

மக்களே..! கொரோனா தடுப்பூசி செம…! சூப்பரா வேலை செய்யுது…. தெம்பாக பேசிய அமைச்சர்..!!

கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் இதனால் பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்  நேற்று உப்பள்ளி கிங்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக இருந்தது. கொரோனா பரவல் குறைவதற்காக மாநில அரசு பல நடவடிக்கைளை எடுத்தது. இதனால் கொரோனா பரவல் கர்நாடக மாநிலத்தில் கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருகிறது மேலும் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கு  உடல்நல பிரச்னை எதுவும் ஏற்பட்டால் அவர்களை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.  பல்லாரியில் தடுப்பூசி போட்ட காரணத்தால் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தி பரவியது . அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  தடுப்பூசிக்கும் மாரடைப்பிற்கும்  எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

ஊடகங்கள் பொது மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்களை அச்சுறுத்த கூடாது. தடுப்பூசி போட்டக் கொண்டவர்கள் யாராவது உயிரிழந்தால் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைக்கு  பிறகு இறப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படும். தடுப்பூசி போடுவது  உடலுக்கு நல்லது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தான்  செய்யும் குறைவதற்கு வாய்ப்பே  இல்லை” என்று அவர் கூறினார்.

Categories

Tech |