பிரான்ஸ் அரசானது, பிரிட்டனுக்கு வரவழைக்க பட்ட 5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தடுத்து நிறுத்தியதாக தகவல் வந்துள்ளன.
பிரிட்டனின் அரசாங்க ஆதாரப்படி, ஐரோப்பிய நாடான ஹொலாந்தில் உள்ள ஹாலிக்ஸ் தளத்தில் இருந்து இங்கு வரவழைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளைக் பிரான்ஸ் அரசாங்கமானது தடுத்துள்ளது. இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் தடுப்பு ஊசி திட்டத்தின் பராமரிப்பு பணிக்காக ஃபைசர் தடுப்பூசி வழங்குவதற்கு கவனம் செலுத்துவதில் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை குறித்து பிரிட்டனை சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் கூறியதாவது, “பிரிட்டனின் தடுப்பூசி பயன்படுத்துவது பாதுகாப்பு அல்ல என்று பிரெஞ்சுக்காரர்கள் பொது இடங்களில் தவறாக பேசி விட்டு, தற்பொழுது அதனை திருடுகிறார்கள். இவ்வாறு தடுப்பூசிகளை தடுப்பதால் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் மக்கள் தங்களது உயிரை இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் தற்போது வெளியான இந்த ஆதாரத்தில் , பிரெஞ்சுக்காரர்களின் செயல் “போர் செயல்” போன்று உள்ளதாக கூறப்படுகிறது.