Categories
Uncategorized உலக செய்திகள்

தடுப்பூசிக்கு எதிராக பதிவிட்டால் உடனே…. யூட்யூப் கடும் எச்சரிக்கை….!!!!

கொரோன  தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால்  பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன .

அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நாட்டை சேர்ந்த சிலர் யூடியூப் பக்கத்தில் தடுப்பூசிகளை பற்றிய தவறான செய்தியை பரப்பி வருகின்றனர் . அந்த சேனலை யூடியூப் நிர்வாகம் முடக்கியுள்ளது. இதையடுத்து யூடியூப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மாட் ஹாப்ரின் கூறும்போது, மக்களிடையே தடுப்பூசி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம்.

ஆனால் அதற்கு எதிர்மறையாக கருத்துக்கள் வெளியிடுவது முறையான செயல் இல்லை. எனவே தடுப்பூசிக்கு எதிராக வீடியோவை வெளியிட்டால் அந்த வீடியோ யூடியூப் சேனலில் இருந்து உடனடியாக  நீக்கப்பட்டு அந்த சேனல் பக்கம் முடக்கப்படும். இந்த நடவடிக்கையின் காரணமாக வருகின்ற நாட்களில் முகநூல், ட்விட்டர் பக்கத்திலும் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துக்கள் பரவி வந்தால் அதற்கும் தடை விதிக்கப்படும் என்று தகவல் வெள்ளியாகியுள்ளன.

Categories

Tech |