ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் முதல் முதலாக இன்று கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
ஆஸ்திரேலியா அரசு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை நாளை முதல் அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு செலுத்த முடிவெடுத்துள்ளது. இந்த வார இறுதிக்குள் குறைந்தது 60 ஆயிரம் டோஸ்கள் குடிமக்களுக்கு கட்டாயம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையில் நேற்று தலைநகர் மெல்போர்ன் சிட்னி உட்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தக் கூடாது என்று கூறி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதமர் மோரிசன் இன்று முதல் நபராக தடுப்பூசி போட்டு கொண்டார். இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் அவருடன் சில சுகாதார பணியாளர்கள் மற்றும் முதியோர்கள் உட்பட ஒரு குழு தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.