கொரோனா தடுப்பூசி குறித்து மற்றொரு சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தொற்று நோயியல் நிபுணர் அதற்க்கு விளக்கம் அளித்துள்ளார்.
கனடாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பலருக்கு இது தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த ஒருவர் எழுப்பிய சந்தேகத்திற்கு மருத்துவர்கள் விளக்கமளித்து விட்டனர். இந்நிலையில் மற்றுமொருவர் அனைவரது சார்பிலும் பயனுள்ள ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது, தடுப்பு ஊசி போட்ட பின்பும் முககவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டுமா? என்பதே அந்த கேள்வி.
இதற்கு பதிலளித்துள்ள தொற்று நோயியல் மருத்துவர் டாக்டர் செயின் சாக்லா கூறியதாவது:- தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரம் கழித்தே அது உடலில் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். எனவே சிறிது காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை கட்டாயமாக மக்கள் பின்பற்றி வர வேண்டும் என்றார்.