Categories
Uncategorized உலக செய்திகள்

சீக்கிரம் போடுங்கள்…. பரிசு தொகையை வெல்லுங்கள்…. நகர மேயரின் அறிவிப்பு…!!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என நியூயார்க் நகர மேயர் அறிவித்துள்ளார்.

உலக அளவில் பரவி வரும் கொரோனாவினால் அதிக அளவு பாதித்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்தவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் தீவிர பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனா பரவல் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் பரவல் அதிகரித்து வருவகிறது. அதிலும் குறிப்பாக புளோரிடா, கலிபோர்னியா, டெக்சாஸ், லூசியானா போன்ற மாகாணங்களில் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இதற்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் தான்  காரணம் என்றும் கருதப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நியூயார்க் நகர மேயர் டெ பிளாசியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பகுதி மக்கள் ஜூலை 30 தேதி முதல் செப்டம்பர் 2 வது வாரத்திற்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செலுத்துபவர்களுக்கு  மட்டும் 100 டாலர் பரிசு என அறிவித்துள்ளார். மேலும் செப்டம்பருக்குள் தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு வாரம்தோறும் பரிசோதனை செய்யப்படுவர் எனவும் கூறியள்ளார். இதுவரை நியூயார்க்கில் 66% பேர் 2 தவணை தடுப்பூசிகளையும் 71% பேர் ஒரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |