தடுப்பூசிகள் தொடர்பாக எழுந்த முக்கிய கேள்விக்கு பூனம் கேட்டர்பால் விளக்கமளித்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றினால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். அதிலும் இந்த தொற்றானது தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குகிறதாம்.
இந்த தொற்றிற்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் பயனளிக்குமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இது குறித்து WHOல் (உலக சுகாதார அமைப்பு) உள்ள தென்கிழக்கு ஆசியாவிற்கான இயக்குனர் பூனம் கேட்டர்பால் விளக்கம் ஒன்றை தந்துள்ளார். அதில் “கொரோனா தொற்றானது பல்வேறு வகையில் உருமாற்றம் அடைகிறது.
மேலும் உலகநாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றிலிருந்து தடுப்பூசிகள் மூலமாக விடுபட்டுள்ளது. இந்த நிலையில் தற்பொழுது பரவிவரும் ஒமைக்ரான் தொற்றினை தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக தடுக்க முடியும். இருப்பினும் ஏதேனும் புதிய தொற்றுகள் பரவினால் அதனை முழுமையாக தடுக்க இயலாது என்பதை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாக விஷயமாகும்.
அதிலும் நோய் தொற்றினால் கடுமையான பாதிப்பினை சந்தித்தவர்கள் மற்றும் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு தடுப்பூசியின் கூடுதல் தவணை தேவைப்படுகிறது. குறிப்பாக நோய்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.