தடுப்பூசி செலுத்தாதவர்களை பணியிலிருந்து நீக்கப்போவதாக பிஜூ தீவின் பிரதமர் அறிவித்துள்ளார்.
உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசிகளை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் செலுத்திக் கொண்டு வருகின்றனர். இன்னும் சில நாடுகளில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் மற்றும் பரிசுகளை தெரிவித்தும் மேலும் பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தும் வருகின்றனர். இந்த நிலையில் தென் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜூ தீவின் பிரதமர் பிராங்க் பைனிமராமா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு வேலை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியின் முதல் டோஸ் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் செலுத்தாத அரசு பணியாளர்களை கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை நவம்பர் 1-ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் பிஜி தீவின் பிரதமர் பிராங்க் பைனிமராமா கூறியுள்ளார்.