தீவிரமாக நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இரண்டாவது கட்டமாக தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்பின் 200 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அப்போது 7 ,6,436 நபர்களுக்கு முதல் தவணையாக தடுப்புசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் 1,20,000 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 44, 611 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து விரைவாக இம்மாவட்டம் முழுவதும் 100% தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் தற்போது முகாம் நடைபெறும் இடங்களில் கணினி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.