Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்க இன்னும் போடலையா…. 2 கடைகளுக்கு சீல்…. கோட்டாட்சியரின் ஆய்வு….!!

தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பஜார் பகுதிகளில் இருக்கின்ற கடைகளில் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி திடீரென ஆய்வு செய்துள்ளார். அப்போது அரசு மருத்துவமனை எதிராக அமைந்திருந்த மருந்து கடை மற்றும் துணிக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தாமல் வேலை பார்த்து வந்தது கோட்டாட்சியருக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் இரண்டு கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து உமர் ரோட்டில் இருக்கும் ஒரு செருப்பு கடைக்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட காரணத்தினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |