தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் முன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 8 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இம்மாவட்டம் முழுவதும் ஐந்தாவது கட்ட தடுப்பூசி முகாம்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற இருக்கிறது. அதன்பின் வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற உள்ளது.
இவற்றில் மொத்தமாக 776 நடமாடும் கொரோனா தடுப்பூசி போடும் குழுக்கள் பணிபுரிய இருக்கின்றனர். இதனையடுத்து இம்மாவட்டத்தில் இருக்கும் ஊராட்சி செயாளர் மற்றும் கிராம செவிலியர்கள் உள்பட மருத்துவ குழுக்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த இருக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களில் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 32 இன்ச் கலர் டிவி பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது 52,000 தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கின்றதால் பொதுமக்கள் அனைவரும் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.