Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

” கோவேக்சின் கோவிசீல்டு” வேலூருக்கு 5,500 வந்திருக்கு…. குளிர்சாதன கிடங்கில் பாதுகாப்பு….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்திற்கு 5,500 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று சேரும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம், மற்றும் கடைவீதி போன்ற பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சளிமாதிரியை சேகரித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து 18 வயதிற்கு மேல் இருக்கும் நபர்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு வேலூர் மாவட்டத்திற்கு  முதலில் 1 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. அதன்பின் 13,000 டோஸ் தடுப்பூசிகள் இரண்டாவது கட்டமாக வந்த்துள்ளது. இதனையடுத்து மூன்றாவது கட்டமாக 5 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இவற்றில் 2000 தடுப்பூசிகள் கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்திற்கு 4ஆம் முறையாக 4,500 கோவேக்சின், 1,000 கோவிசீல்டு சேர்த்து 5,500 டோஸ் தடுப்பூசிகள் வேலூருக்கு வந்துள்ளது. இவையெல்லாம் வேலூர் அண்ணா சாலையில் இருக்கும் மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Categories

Tech |