கொரோனா தடுப்பூசியானது ஏழை நாடுகளுக்கு சரிவரக் கிடைக்கவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.
இந்த ஓரிரண்டு ஆண்டுகளில் மனித குலத்தையே பெரும் அச்சத்திற்கு கொரோனா வைரஸ் தாக்கம் உட்படுத்தியுள்ளது. ஆகையால் உலக நாடு முழுவதும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியைப் தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தடுப்பூசியானது ஏழை நாடுகளுக்கு சரியான முறையில் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறது.
அதாவது போர்ச்சுகல் மூலம் நடத்தப்பட்ட ஆன்லைன் சுகாதார மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், ” இதுவரை உலக நாடு முழுவதும் சுமார் 100 கோடி அளவிலான கொரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் மட்டும் 82 சதவீதம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் குறைவான வருவாய் கொண்ட ஏழை நாடுகளில் 0.3 சதவீதம் மட்டுமே தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ” அவர் அறிவித்துள்ளார்.