ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் 1 % மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவைப் போலவே ஜப்பான் நாட்டிலும் கொரோனா 4 வது அலை பரவி வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற பெருநகர பகுதிகளில் உள்ள 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து பிரதமர் யோஷி ஹிடே சுகா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று (வெள்ளி கிழமை) நடைபெற்ற போது வருகிற 25-ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை 4 மாகாணங்களில் அவசர கால நிலைக்கு உத்தரவிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் டோக்கியோ, ஒசாகா, கியோட்டோ மற்றும் ஹியோகோ போன்ற மாகாணங்களில் அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால் அது மக்களிடையே குறைந்த அளவு போக்குவரத்தை கட்டுப்படுத்தும் கால அளவில் மட்டுமே இந்த உத்தரவு பின்பற்றபடும் என்று அவர் தெரிவித்தார்.ஆனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்வது போன்றவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளுக்கும் தடைவிதிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதிகளான வணிக வளாகங்கள் மற்றும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் மீறினால் தகுந்த அபராதம் விதிக்கப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார். கொரோனா அதிகமாக காணப்படும் நிலையில் ஜப்பான் மக்களில் 1 % மக்களுக்கு மட்டுமே சைபர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி வழங்கும் பணியில் பின்தங்கிய நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.