கொரோனா பாதிப்பால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
உலக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் சிக்கிக்கொண்டு இருந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்திற்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பல கட்டுபாடுகளுடன் விமானத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் இதனைத் தொடர்ந்து சர்வதேச அளவில் பயணம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் அடங்கிய தடுப்பூசி பாஸ்போர்ட்டை வழங்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து அரசு இந்த திட்டத்தை மே மாதம் முதலே தொடங்கியுள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்கா பொது மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உரிமைகளில் பெரும் அளவில் கவனம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது . அமெரிக்க அரசு தடுப்பூசி பாஸ்போர்ட்டை வழங்க ஆதரவு அளிக்காது என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ‘ஜென் சாகி’ அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசிடம் தனிநபர் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் எதுவும் இல்லை எனவும் தனியார் நிறுவனம் ஊழியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர். ஆகையால் தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகை ஆக்கபூர்வமாக தெரிவித்துள்ளது.