Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நீங்க தடுப்பூசி போட வரலான…. இது இயங்குவதற்கு அனுமதி இல்லை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!

தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்யவேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் தடுப்பூசி டிரைவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் போன்றோர் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர்.

எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி கொள்வதை உறுதி செய்யவேண்டும். இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஊரடங்கு முடிந்தபின் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படாது என்று கலெக்டர் பார்த்திபன் எச்சரித்துள்ளார். இவ்வாறு அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு அலுவலர்கள், நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |