சத்தீஸ்கரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் வராமல் தயக்கம் காட்டிக் கொண்டு வந்திருந்த நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கான பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர். அதனால் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நகை தயாரிக்கும் பொற்கொல்லர் சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் அவர்கள் அமைத்துள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு மூக்குத்தியும் ஆண்களுக்கு சிறப்பு பரிசு பொருட்களும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மும்பை தாராவி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவசமாக சோப்பு, ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சத்தீஷ்கர் மாநிலம் பிஜாப்பூரில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வித்தியாசமான முறையில் பரிசுப் பொருள்களை மாவட்ட நிர்வாகம் வழங்குவதாக கூறியுள்ளது. அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவருக்கும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.