Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் முகாம்” தொடங்கி வைத்த கலெக்டர்…. 78 திருநங்கைகளுக்கு…!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி காந்திரோடு, ஜெயராம்செட்டி தெருவில் ஜெயின் சங்கம், மாவட்ட சமூகநலத்துறை ஆகியவை சேர்ந்து திருநங்கைகளுக்கு தடுப்பூசி முகாம் ஏற்படுத்தியது.

அதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட சமூகநல அலுவலர் முருகேஸ்வரி, ஜெயின் சங்க தலைவர் ருக்ஜிராஜேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 78 திருநங்கைகளுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தினர்.

Categories

Tech |