வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 18 வயது மேல் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் மாவட்டத்தில் ஒரே நாளில் 51 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 18 வயது மேல் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து இந்த மாவட்டத்திற்கு வந்த 40 ஆயிரம் டோஸ் கோவிசீல்டு தடுப்பூசிகள் முன்னுரிமை அடிப்படையில் 18 வயது மேல் இருபவர்களுக்கு சிறப்பு முகாம்களில் வைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 319 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.