Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. மருத்துவர்களின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் கொரோனா தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தடுப்பூசி முகாம்கள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலானோர் ஆர்வத்துடன் செலுத்தி கொள்கின்றனர். இவ்வாறு நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ராயபுரம்,  பொதக்குடி, கோவில்வெண்ணி, தளிக்கோட்டை ஆகிய பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் 480 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதனையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலட்சுமி தலைமையில், மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை செய்துள்ளனர். இதில் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள், 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்தப்பட்டது.

Categories

Tech |