Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” இதுவரை இவ்வளவு பேருக்கு…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் நிரந்தர தடுப்பு முகாம்களில் 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி முகாம்களில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவு ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர். இதுகுறித்து சுகாதாரபணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது, 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே பொது மக்களின் வசதிக்கேற்ப பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும், வருகைக்கு ஏற்றவாறு கூடுதலாக முகாம்கள் நடத்தபடும் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் 4-வது இடத்தில் வேலூர் இருப்பதாக சுகாதாரபணிகள் இணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் மாவட்டத்தில் முதல் டோஸ் மற்றும் 2-வது டோஸ் என்று 3 லட்சத்து 44 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகவே தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு விழிப்புணர்வு நடத்தி அங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு அரசு வழிகாட்டு விதிமுறைகளின்படி கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக சுகாதாரபணி துணை இயக்குனர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |