Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 34 இடங்களில் முகாம்கள்…. கலெக்டரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 34 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 34 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குழித்துறை, கோதநல்லூர் போன்ற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நாகர்கோவில் டதி பள்ளி, தம்மத்துகோணம் சி.எம்.சி. பள்ளி, சால்வேசன் மிலிட்டரி பள்ளி போன்று பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் வெளிநாடு செல்பவர்களுக்கு கோவிஷீல்டு 2-வது செலுத்தப்படுகின்றது. அதன்பின் வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளியில் நடைபெறும் முகாமில் கோவேக்சின் 2-வது டோஸ் செலுத்தப்படுகின்றது. இவ்வாறு மேலே குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும் முகாம்களில் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதள முகவரியின் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகின்றது.

இதனைதொடர்ந்து பூதப்பாண்டி, கருங்கல், பத்மநாபபுரம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், நாகர்கோவில் இந்துக் கல்லூரியிலும் நடைபெறும் முகாமில் அவைவருக்கும் நேரடி டோக்கன் முறையில் 2-வது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்படுகின்றது. அதன்பின் நேரடி டோக்கன் வழங்கப்படும் முகாம்களான  நாவல்கோடு, புல்லுவிலை, பூலியூர் சாலை போன்ற அரசு தொடக்கப் பள்ளிகளிலும், குளச்சல், புனித மேரி தொடக்கப்பள்ளி, குலசேகரன் புதூரில் உள்ள ஆசிரியர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கன்னியாகுமரி, குளச்சல், சேனம்விளை, அருமனை, குலசேகரம் போன்ற அரசு மருத்துவமனைகள், இடையன்கோட்டை புனித அந்தோணியார் பள்ளி, கொல்லங்கோடு, ஸ்ரீதேவி மேல்நிலைப்பள்ளி, தேமானூர் புனித தாமஸ் நடுநிலைப்பள்ளி, பெருஞ்சிலம்பு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் வடக்கு சூரங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி போன்றவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகின்றது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |