Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. ஆர்வத்துடன் செல்லும் மக்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

நன்னிலம் பகுதியில் கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியில் பொதுமக்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே தற்போது 3-வது அலை கொரோனா அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரும் என சில மருத்துவர்கள் கூறி வருவதாக தகவல் பரவத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள், கிராம மக்கள் பொது சுகாதாரத் துறையை அணுகி, தினசரி சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நீடித்து வருவதால் நன்னிலம் பகுதியில் விரைவில் 18 வயது முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 100 சதவீத இலக்கை அடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் அரசு பொது மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு முகாம்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரிப்பதை காணமுடிகின்றது.

Categories

Tech |