Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” 43 இடங்களில் முகாம்…. கலெக்டரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 43 இடங்களில் இன்று கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் முகாம்கள் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு நடத்தபட்ட  65 முகாம்களில் மொத்தம் 10 ஆயிரத்து 861 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (சனிக்கிழமை) 43 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, கிள்ளியூர், தூத்தூர், இடைக்கோடு, குட்டக்குழி, கோதனல்லூர் போன்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆன்லைன் மூலம் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகின்றது. இதேபோன்று தடிக்காரன்கோணம், அருமல்லூர், ஆரல்வாய்மொழி, தோவாளை, அழகப்பபுரம், கொட்டாரம், மருங்கூர், சிங்களயர்புரி, கணபதிபுரம், வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, நடுவூர்கரை, முட்டம், குளச்சல், கீழ்குளம், நட்டாலம், உண்ணாமலைகடை, குழித்துறை, முன்சிறை, தேங்காப்பட்டணம், ஆறுசேதம், கொல்லங்கோடு, பத்துகாணி, மேல்புறம், களியக்காவிளை, பளுகள், கண்ணனூர், திருவட்டார், பேச்சிப்பாறை, சுருளோடு, திருவிதாங்கோடு, பள்ளியாடி, ஓலவிளை, பத்மநாபபுரம் போன்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரடி டோக்கன் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. இந்த முகாம்களில் நீரழிவு நோய், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |