Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” மொத்தம் 23 இடங்களில்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 23 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 280 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தில் 23 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளி மற்றும் குழித்துறை அரசு மருத்துவமனையில் வெளிநாடு செல்பவர்களுகான 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனையடுத்து டதி பெண்கள் பள்ளியில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு 2-வது டோஸ் போடப்பட்டது. அதன்பின் மீதம் இருக்கும் அனைத்து முகாம்களிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து நாகர்கோவிலில் பொறுத்தவரையில் சால்வேசன் பள்ளி, இந்துகல்லூரி, கன்கார்டியா பள்ளி போன்ற இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இங்கு பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்கு முன்பாக தடுப்பூசிக்குரிய டோக்கன் கிடைக்காததால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். மேலும் கோட்டார் கவிமணி பள்ளியில் நடந்த வெளிநாடு செல்பவர்களுக்குரிய முகாமிலும் கூட்டம் அலைமோதியது. இதில் 300 டோஸ் கொடுக்கப்பட்டு ஆன்லைன் மூலம் டோக்கன் பெற்ற பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

ஆனால் ஆன்லைன் மூலம் டோக்கன் பெறாதவர்களும் கவிமணி பள்ளிக்கு வந்து தங்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கு தடுப்பூசிபோடாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இதேபோன்று பரக்குன்று புனித ஜேம்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் 220 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நல அலுவலர் ஸ்ரீ குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு மாவட்டம் முழுவதிலும் 23 இடங்களில் 9,449 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |