Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்” ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. சுகாதாரத் துறையினரின் தகவல்….!!

கன்னியாகுமரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்திற்கு 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்ததையடுத்து 65 இடங்களில் முகாம்கள் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 14 இடங்களில் ஆன்லைன் டோக்கன் மூலம் தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி போன்ற இடங்களில் வெளிநாடு செல்பவர்களுக்குரிய 2-வது டோஸ் மட்டும் செலுத்தப்பட்டது. இதேபோன்று பூதப்பாண்டி, , தடிக்காரன் கோணம், தம்மத்துகோணம் உட்பட 51 இடத்தில் நேரடி டோக்கன் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்பின் நாகர்கோவில் மாநகராட்சி பொறுத்தவரை 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதாவது அனைத்து வயதினருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி சால்வேஷன் ஆர்மி பள்ளி, இந்து கல்லூரி மற்றும் டதி பள்ளி போன்ற 3 இடங்களில் போடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 200 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு இந்த மாவட்டத்தில் நடைபெற்று வந்த அனைத்து முகாம்களிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரையிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 748 ஆக உயர்ந்து இருக்கின்றது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |