வேலூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு முகாம்கள் போன்றவற்றில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த மாவட்டத்திற்கு 2 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் 1,120 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளது.
எனவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத் துறையினரின் தெரிவித்துள்ளனர்.