திருப்பத்தூரில் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கும் பணி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 மணி நேரமாக காத்திருந்த நிலையிலும் ஒருவர் கூட தடுப்பு ஊசி செலுத்துவதற்கு வரவில்லை.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அதன்பின்னர் கிராமத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டதால் ஊராட்சி செயலாளர் கு. முத்துக்குமரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.