Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” தொடங்கி வைத்த அதிகாரிகள்…. ஆர்வத்துடன் பொதுமக்கள்….!!

18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டு இமாம் தெரு பகுதியில் உள்ள  அகமதியாபள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ, கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து வட்டார மருத்துவ அலுவலர் செல்வி வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிகள் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், முன்னாள் நகர சபை தலைவர் அரசு, டீ சந்திரசேகர், முன்னாள் நகர மன்ற உறுப்பினரும், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எம்.எஸ். சவுத்அகமத், சுல்தான், அஸ்கர், பள்ளி செயலாளர் மசூத் அகமத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்தி கொண்டனர்.

Categories

Tech |