கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களின் பல்வேறு முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை 2 முக்கிய நிறுவனங்கள் தயாரித்து வந்தது. கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்தது.
தற்போது சீரம் நிறுவனம் தடுப்பூசியின் விலையை உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாநில அரசுகளுக்கு ஊசியின் ஒரு டோஸ் ரூ 400 என்ற விலைக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 என்ற விலைக்கும் வழங்கபடுவதாக கூறியுள்ளனர். திடீர் விலை உயர்வால் சீரம் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விலை உயர்வு மக்களுக்கு மட்டுமே நெருக்கடியை தருவதாகவும் மோடியின் நண்பர்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்து இருப்பதாகவும் மாநிலங்களுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்துள்ளதாகவும் மறைமுகமாக கூறியுள்ளார்.