தகாத வார்த்தைகளால் பேசிய வியாபாரியை கட்டி வைத்து அடித்த ஊராட்சி தலைவர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் துணி வியாபாரியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் என்பவரை வெங்கடேஷ் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சக்திவேல் வெங்கடேஷை ஏதாவது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் அவரது தரப்பினரான காசிமுத்து, மணிகண்டன் ஆகியோருடன் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வெங்கடேஷ் வீட்டிற்கு சென்ற 3 பேரும் நாகுடி கடைதெருவில் உள்ள ஒரு கம்பில் வெங்கடேஷை கட்டி வைத்து அடித்துள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கட்டை அவிழ்த்து வெங்கடேசை மீட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஊராட்சி தலைவர் உட்பட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.