பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக நடந்த தகராறில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கட்டராங்குளம் பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். இவரது உறவினர் ஒருவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் வேல்முருகன் அப்பகுதியில் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வேதநாயகம், குமார், இசக்கிமுத்து மற்றும் வேல்சாமி ஆகிய 4 பேரும் ஆத்திரமடைந்து வேல்முருகனை வழிமறித்து சாதிப்பெயரை சொல்லி இழிவாகப் பேசி அவரை தாக்கினர்.
அதன்பின் அவர்கள் வேல்முருகனின் சட்டைப்பையில் இருந்த ரூ.8300 மற்றும் செல்போனையும் பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த வேல்முருகன் நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேல்முருகன் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார், இசக்கிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தகராறில் தொடர்புடைய மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.