Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த கணவர்…. மனைவியின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்பத் தகராறில் கணவர் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பள்ளிக்கூட தெருவில் சின்னையன்-வீரம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சின்னையன் விவசாயியாக இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்கனவே கணவர் மீது கோபத்தில் இருந்த வீரம்மாள் அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து சின்னையன் மீது ஊற்றினார்.

இதனால் சின்னையனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |