Categories
தேசிய செய்திகள்

தாய் வீட்டில் விருந்து…”முடித்த கையோடு காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுப்பெண்”… அதிர்ந்துபோன புது மாப்பிள்ளை..!!

மத்திய பிரதேசத்தில் திருமணம் முடிந்து சில தினங்கள் ஆன புதுப்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திர பிரதேசம் சதர்பூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி ரைக்வார் என்ற இளம்பெண்ற்கும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராகுல் என்ற இளைஞருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெண் வீட்டில் செய்யப்படும் சடங்கு மற்றும் விருந்திற்காக புதுமண தம்பதிகள் பெண் வீட்டிற்கு வந்துள்ளன. சடங்கு முடிந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு செல்ல தயாராக இருந்த நிலையில் புதுமணப் பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

மேலும் வீட்டில் வைத்திருந்த 5 லட்சம் மதிப்பிலான நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் மற்றும் அவரது வீட்டார் பெண் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டனர். தங்களது பெண்ணை மீட்க கோரி பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர் திருமணமாகி சில தினங்களான நிலையில் புதுப் பெண் தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |