Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாய், மகன் மீது கொடூரத் தாக்குதல்-பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

மதுரையில் முன்விரோதம் காரணமாக தாய்-மகன் ஆகிய இருவரும் ஆயுதங்களால் தாக்கப்பட்ட பதபதைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை பெத்தானியாபுரம் மாதா கோவில் பாஸ்கி நகர் பகுதியைச் சேர்ந்த ரெஜினா தனது கணவர் வெள்ளைச்சாமி மற்றும் மகன் முரளிதரனோடு வசித்து வரும் நிலையில் எதிர் வீட்டில் உள்ள லூர்துசாமி என்பவருடன் மாநகராட்சி இட ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற போவதாக லூர்துசாமிடம் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து ரெஜினா குடும்பத்தினரிடம், லூர்துசாமி குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆயுதங்களைக் கொண்டு ரெஜினா மற்றும் முரளிதரனை சித்ரா, ப்ரின்ஸ், லூர்துசாமி, பாபு  ஆகிய 4 பேர் இணைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்த ரெஜினா, முரளிதரன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |