ராமநாதபுரம் மாவட்டத்தில் தாய்த்தமிழர் கட்சியினர் மேகதாதுவில் காவிரி ஆறு குறுக்கே அணை கட்டுவதை கண்டித்து எடியூரப்பா வாட்டாள் நாகராஜன் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்து முனை பகுதியில் தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஈடுபட்டுள்ளனர். இதில் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழ் பெயர்களை அளிக்க முயற்சி எடுக்கும் வாட்டாள் நாகராஜை எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு தாய் தமிழர் கட்சியின் தலைவர் பாண்டியன் தலைமை தங்கியுள்ளார்.
இதனையடுத்து மாவட்ட தலைவர் திருப்பதி, பொதுச்செயலாளர் செல்வம், அமைப்பு செயலாளர் சேது முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து எடியூரப்பா மற்றும் வாட்டாள் நாகராஜின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனைப்பார்த்த காவல்துறையினர் உருவ பொம்மைகளை தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.