Categories
மாநில செய்திகள்

தாய்லாந்து வேலை மோசடி; இருவர் கைது …!!

தாய்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து   முகர்வுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை 18 நபர்களிடமிருந்து, அந்த  பணத்தை வசூல் செய்து,  துபாய் வழியாக பாங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு மியான்மர் நாட்டிற்கும் கடத்திச் சென்று, அங்கிருந்து சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.

குறிப்பாக இவரது  நிலையை உறவினர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறை துரித நடவடிக்கின் மூலமாக…  இங்கிருந்து மியான்மரில் இருக்க கூடிய தூதரகத்தை தொடர்பு கொண்டு , சம்பந்தப்பட்ட நபரை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் மட்டுமல்லாமல் கம்போடியா நாட்டிலும் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திலும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி, அங்கேயும் முகவர்கள் இதே போல ஒரு சமூக விரோத செயலில் ஈடுபட வைத்துள்ள தெரிய வந்தது.

இப்படி சட்டவிரோதமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை அழைத்துச் சென்று, அதோடு பணமும் வசூல் செய்து கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட வைத்து தெரிய வந்திருக்கிறது. அப்படி சமூக விரோத செயலில் ஈடுபட்ட திருச்சி பகுதியை சேர்ந்த கேர் கன்சல்டன்சி நிறுவனத்தின் முகவர்களான ஹானவாஸ்,  முபாரக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாமல் இதுபோன்று ஒரு செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. 6 மாதம் சுற்றுலா பயணம் விசாவில் அழைத்துச் சென்று இது போல ஏமாற்றக் கூடிய சூழல் இருந்தது. தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்கள் இது போல யாரையும் நம்பி சென்று, இந்த மாதிரி செயலில்  ஈடுபட வேண்டாம் என்று காவல்துறை  எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்கள். முகவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் [email protected] மற்றும் 044-28447701-இல் தொடர்பு கொள்ளலாம் என டிஜிபி தெரிவித்துள்ளார்

Categories

Tech |