Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தைப்பூசம் என்றால் என்ன…? எதற்காக கொண்டாடப்படுகிறது…?

தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்:

தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சிவன் நடராஜராக நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம்.  இந்த வகையில் தைப்பூசம் சிவசக்திக்கு உரிய நாள் ஆகிறது. இதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனி முருகன் கோவிலில் மட்டும் இந்த விழா பிரசித்தமாகி விட்டது.

இதற்கு காரணம் என்ன தெரியுமா? பழனி மலை அடிவாரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பெரியநாயகி அம்பாள்- கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு சிவன்- அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி உள்ளது. பிரதான வாசலும் கொடிமரமும் முருகன் எதிரில் உள்ளதால் கோவிலுக்கு வருபவர்கள் முதலில் முருகனை வழிபட்டனர். காலப்போக்கில் முருகன் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் தைப்பூசத் திருநாளில்  கொடி ஏற்றப்பட்டது.தகப்பனை வழிபட வந்தவர்கள் தகப்பன் சுவாமியான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டனர்.

இதனால் தைப்பூச திருநாள் முருகனுக்கு உரியதாக மாறிவிட்டது.  தற்போதும் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. இங்கு உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுகிறார். ஆனாலும் பக்தர்கள் மலைமேல் இருக்கும் தண்டாயுதபாணி மீது கொண்ட பக்தியால் அங்கே குவிகின்றனர். இதுவே தைப்பூசம் எப்படி உருவானதற்கு என்பதற்கான காரணங்கள்.

 

அடுத்ததாக தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம். நவகிரகங்களில் சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தனது வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகர ராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடக ராசியில் சஞ்சரிக்கிறார். அன்று மகரத்தில் இருக்கும் சூரியனும் கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர்.

இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?அம்பிகை சிவகாமி கண்டுகளிக்க பரம்பொருளான சிவன் நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசத் திருநாளில் சிவன் பார்வதி இணைந்து ஆடுவதாக சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதை பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர்.

இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை என்பர். அம்மையப்பரான சிவபார்வதி மகிழ்ந்திருந்து  ஈன்றெடுத்த ஞானக் குழந்தை முருகன்.அந்தவகையில் பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூச திருநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.

Categories

Tech |