மனநிலை குறித்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது மனநலம் குறித்த பிரச்சனை தான். வேலைகளில் இருக்கக்கூடிய சுமை, வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனை ஆகியவற்றை மனதில் வைத்து நினைத்துக் கொண்டே இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த மனநிலை என்பது நமது உணவுகளை பொருத்தும் அமைகிறது .
அந்த வகையில் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகரித்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. மேலும் மூளை செயல்பாடு அதிகரித்து பதட்டம் போன்றவை குணமாகிறது. மனநோய்களை சரியாக்கி மனநிலையையும் மேம்படுத்துகிறது.