Categories
உலக செய்திகள்

தைவானை நாங்கள் பாதுகாப்போம்…. ஜோ பைடன் உறுதி…. செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்….!!

தைவான் நாட்டை நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

தைவான் நாட்டின் மீது சீனா அரசு போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசின் நீண்டகால கொள்கை மீறல் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “தைவானை பாதுகாக்க அமெரிக்கா உதவும், ஆனால் தாக்குதல் ஏற்பட்டால் உதவுவோம் என வெளிப்படையாக உறுதி அளிக்கவில்லை. சீனா அமைதியான முறையிலேயே தைவானை இணைக்க விரும்புவதாக கூறியது. ஆனால் தைவான், சீனாவுடன் இணைய விரும்பவில்லை என்றும் சுதந்திர ஜனநாயக அந்தஸ்தை தக்கவைக்க விரும்புகிறோம் என தெரிவித்தது. மேலும் தைவான் விவகாரத்தில் சிலர் ஆதாயம் பார்ப்பதாக, அமெரிக்காவை குறிவைத்து சீனா குற்றம் சாட்டியது. ஒரு போர் சூழலில் தைவானை தள்ளுவது யாருக்கும் விருப்பம் இல்லாத ஒன்றாகும் என சீனா குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் தைவான் எல்லையில் மறைமுகமாக சீனா கண்காணித்து, போர் பயிற்சியிலும் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் கடந்த மாதம், தைவானுக்கு ஆதரவாக ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்திருந்தார். அதில் அமெரிக்கா எப்போதும் தங்கள் நட்பு நாடுகளை பாதுகாக்கும், இதில் தைவானும் விதிவிலக்கல்ல என்றார். மேலும் ஜப்பான், தென் கொரியா போன்று அனைத்து நேச நாடுகளையும் பாதுகாப்போம் என்ற உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருந்தார்” என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |