அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைவானில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல வீடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கட்டிடத்தின் முதல் ஐந்து தளங்களில் அலுவலகங்களும் 7 முதல் 11 வரை உள்ள தளங்களில் மக்கள் வசிக்கும் வீடுகளும் உள்ளது.
மேலும் அதிகாலை நேரத்தில் தீ பிடித்ததால் வீடுகளில் இருந்த மக்கள் அதிகளவில் இறந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 32 பேர் இறந்துள்ளதாகவும் அவர்களின் உடல்களை மீட்டு பிணவறைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் 55 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 14 பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தைவான பொறுத்தவரை ஒருவர் இறந்துவிட்டார் என்பதை மருத்துவமனை தான் அறிவிக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.