Categories
உலக செய்திகள்

‘தைவான் சுதந்திர நாடு’…. அமெரிக்க அதிபரின் பேச்சு…. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

தைவான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் கடந்த செவ்வாய்க்கிழமை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். அதில் வணிகம், தென்சீனக் கடல், மனித உரிமைகள், தைவான் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர். மேலும் சுதந்திரத்துக்காக அமெரிக்காவின் உதவியை நாடி வரும் தைவானையும் சீனாவை கட்டுப்படுத்துவதற்காக தைவான் விவகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்காவையும்  நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்று அதிபர் ஜின்பிங் கூறினார். இந்த ஆலோசனைக்கு பிறகு நியூ ஹாம்ப்ஷையரில் அதிபர் ஜோ பைடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதனை அடுத்து செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது “தைவான் ஒரு சுதந்திர நாடு, அதன் முடிவுகளை அதுவே எடுக்கிறது”. என்று கூறினார். ஆனால் தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிகாரபூர்வ செயல்பாடுகளுக்கு இது எதிரானதாகும். குறிப்பாக தைவான் தொடர்பாக அமெரிக்கா நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன் படி இதுவரை தைவானை சுதந்திர நாடாக அமெரிக்கா அரசு அங்கீகாரம் செய்யவில்லை. இருப்பினும் அதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சூழலில் ‘சுதந்திர நாடு’ என்று தைவானை அமெரிக்க அதிபர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து  மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து அதிபர் கூறியதில் ‘அமெரிக்க நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தை தமது அரசு மதிக்கிறது. மேலும் சீனாவின் இறையாண்மை குறித்தும் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. குறிப்பாக சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதனை நிறைவேற்ற மட்டுமே தைவானை ஊக்குவிக்கிறோம். அதனை சுதந்திர நாடாக அறிவிக்க ஊக்குவிப்பதில்லை. இது தொடர்பான தீர்மானத்தை தைவான் தான் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இது போன்று கருத்து தெரிவித்துவிட்டு பின்வாங்குவது முதல்முறை அல்ல.

ஏற்கனவே ஒரு முறை, சீனா தனது தாக்குதலை தைவான் மீது தொடர்ந்தால் அதற்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று கடந்த ஆகஸ்ட்டிலும் அக்டோபரிலும் கூறி அதிபர் ஜோ பைடன் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் பிறகு தைவான் தொடர்பான அமேரிக்காவின் அதிகாரப்பூர்வ நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை கூறியது. குறிப்பாக தைவானை தனி நாடாக அங்கீகாரம் செய்யும் நாடுகளுடன் தூதரக உறவை மேற்கொள்ள முடியாது என சீன கூறியிருந்தது. இதனால் தைவானுடன் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக இல்லாமல் நல்ல உறவை வளர்த்து வருகிறது.

Categories

Tech |