Categories
உலக செய்திகள்

தைவான் வான் பரப்புக்குள்…. அத்துமீறும் சீன போர் விமானங்கள்…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

சீன போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டுக்குள் அத்துமீறுவதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும் சீன அரசு, தைவான் தனது நாட்டில் ஒரு பகுதி என கூறி வருகிறது. அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் தைவானை படை பலத்தோடு கைப்பற்றவும் தயங்க மாட்டோம் என சீன மிரட்டி வருகிறது. மேலும் சீன அரசின் போர் விமானங்கள் தொடர்ந்து தைவான் நாட்டு வான் பரப்புக்குள் ஊடுருவி வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவான் வான் பரப்புக்குள் ஊடுருவியுள்ளது. இது குறித்து சீனா மீது தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நீடித்துள்ளது. இந்த சம்பவத்தினால் சீன அரசு மீது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி அளித்த பேட்டியில் கூறியதாவது, “தைவானுக்கு தொடரும் சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ அத்துமீறலால் நாங்கள் கவலைப்படுகிறோம். இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் மதிப்பை குறைக்கிறது. மேலும் தைவானுக்கு எதிரான ராணுவ, தூதரக, பொருளாதார அழுத்தம் மற்றும் வற்புறுத்தலை சீனா கைவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். அதோடு தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைத்திட எங்களுக்கு ஆர்வம் உள்ளது. எனவே தைவானுக்கு போதுமான சுய பாதுகாப்பு திறனைப் பராமரிக்க நாங்கள் தொடர்ந்து உதவுவோம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |