குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடசிறுவள்ளூர் பகுதியில் சின்னப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரும் அதே பகுதியில் வசிக்கும் சரத்குமார் என்பவரும் இணைந்து மதுபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து அதே கிராமத்தில் இருக்கும் சந்தோஷ் என்பவர் மாரியம்மன் கோயிலின் அருகாமையில் நின்ற போது அவரை சரத்குமார் மற்றும் சின்னப்பையன் ஆகிய 2 பேரும் தகாத வார்த்தைகள் பேசி திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரத்குமாரை கைது செய்து பின் தலைமறைவாக இருக்கும் சின்னப்பையனை வலைவீசி தேடி வருகின்றனர்.